வணிகம்
SLIIT ன் ICAC 2025 நிகழ்வில் AI, Quantum மற்றும் Beyond ஆகியவற்றின் அடுத்த சகாப்தத்திற்கு வித்திடப்பட்டுள்ளது

Dec 24, 2025 - 11:59 AM -

0

SLIIT ன் ICAC 2025 நிகழ்வில் AI, Quantum மற்றும் Beyond ஆகியவற்றின் அடுத்த சகாப்தத்திற்கு வித்திடப்பட்டுள்ளது

கணினித் துறையின் மேம்பாடுகள் குறித்த சர்வதேச மாநாட்டு நிகழ்வான ICAC 2025, டிசம்பர் ஒன்பதாம் மற்றும் பத்தாம் திகதிகளில் கோட்டை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மொனார்க் இம்பீரியல் நிகழ்வு மட்டத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. The Future of Computing AI, Quantum and Beyond என்ற தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், வளமான உரையாடல் மற்றும் அறிவைப் பகிர்வதற்காக இந்த இரு தினங்களிலும் முன்னணி கல்விமான்கள், தொழில்துறை வல்லுனர்கள், மற்றும் ஆரம்ப தொழில் ஆராய்ச்சியாளர்களை ஒரே மேடையில் இடம்பெறச் செய்துள்ளது. 

மிகவும் குறிப்பிடக்கூடிய வகையில் பெருந்திரளானோர் இம்மாநாட்டில் பங்குபற்றியுள்ளனர். பன்னிரண்டு தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகள் மத்தியில் சுமார் இரண்டாயிரம் வரையான படைப்பாளர்கள் மொத்தமாக நானூற்று அறுபத்து இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்கள் மற்றும் அதனை ஆய்வு செய்தவர்கள் இடையில் ஒருவருக்கொருவர் மற்றவரை அறிந்திராத வகையில், கண்டிப்பான நடைமுறையின் கீழ், நூற்றுப் பதினாறு கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு, நவீன கணினித் துறையின் பல்வேறு வடிவக்கூறுகள் மத்தியில் புத்தாக்கமான ஆராய்ச்சியைக் காண்பித்துள்ளனர். 

பேராசிரியர் அவுஸ்திரேலியாவின் Curtin University ன் புகழ்பூத்த John Curtin Distinguished Professor பேராசிரியர் இகோர் ப்ரே மற்றும் கனடாவின் University of Manitoba ன் பேராசிரியர் கார்சன் காய் சாங் லியுங் ஆகிய இரு புகழ்பூத்த பேச்சாளர்களின் உரைகள் இம்மாநாட்டின் சிறப்பம்சமாக அமைந்தது. இம்மாநாடு உலகளாவிய சூழ்நிலையில் எந்த அளவுக்கு பொருத்தமானது என்பதை அவர்களுடைய பங்களிப்புக்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதுடன், ஆழமான கல்வி மற்றும் தொழில்துறை அறிவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் நிகழ்வை மேலும் மெருகேற்றியிருந்தன. 

பிரதான நிகழ்வுக்கு இணையாக, உலகளாவில் அங்கீகாரம் பெற்ற கல்விமான்கள் மற்றும் பயிற்சி நிபுணர்களால் நடாத்தப்பட்ட மாநாட்டுக்கு முன்னரான மற்றும் பின்னரான பல்வேறு செயலமர்வுகளையும் ICAC 2025 ஏற்பாடு செய்திருந்தது. மாநாட்டு நிகழ்வுக்கு முன்னராக இடம்பெற்ற செயலமர்வுகளின் போது நெருக்கடி முகாமைத்துவத்திற்கான IoT மற்றும் வலையமைப்பு, இரகசிய கணினிக் கட்டமைப்பு கூட்டமைப்பு, ஆராய்ச்சிப் பணிப்பாய்வுகளுக்கான உருவாக்க செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், பயனர் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கான உரை பகுப்பாய்வு மற்றும் நிறுவன பரிணாம வளர்ச்சிக்கான முகவர் செயற்கை நுண்ணறிவு ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. மாநாட்டுக்குப் பின்னரான செயலமர்வுகளின் போது மருத்துவத்துறையில் விம்ப பகுப்பாய்வுக்கு GAN களின் பயன்பாடு, துறைகளுக்கான இடைநிலை ஆராய்ச்சி அமர்வு, மற்றும் மூன்று நாள் MongoDB பயிற்றுநர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்குப் பின்னரான அமர்வுகள் பிரதான நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பாடு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நவீன வழிமுறைகள் குறித்த நேரடி அறிவு வாய்ப்புக்கள் மற்றும் அனுபவத்தை பங்கேற்பாளர்களுக்கு வழங்கவுள்ளது. 

SLIIT கணினி கற்கைபீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ICAC, ஆராய்ச்சியைப் பரப்புவதற்கான முதன்மையான Scopus குறியிடப்பட்ட அமர்வு மன்றம் என்ற அதன் நற்பெயரைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பி வருகின்றது. Google Scholar h-index குறியீட்டில் பதினாறு புள்ளிகளை இம்மாநாடு சம்பாதித்துள்ளதுடன், தொழில்நுட்ப இணை அனுசரணையாளராக IEEE Sri Lanka Section ன் வலுவான ஆதரவையும் பெற்றுக்கொண்டது. ஏற்றுக்கொள்ளப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் நோக்கம் மற்றும் தரம் ஆகியவற்றிற்கு அமைவாக, IEEE Xplore க்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. பிளாட்டினம் அனுசரணையாளராக MongoDB மற்றும் Curtin University Colombo, SLIIT Research and International, Sysco LABS, Creative Software, Peoples Leasing, மற்றும் ICT Academy of India உள்ளிட்ட கூட்டாளர் வலையமைப்பின் ஆதரவு இந்நிகழ்வுக்கு மேலும் வலுவூட்டியுள்ளது. 

ICAC 2025 ன் பொதுத் தலைவர் கலாநிதி பிரசன்ன சுமதிபால அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “புத்தாக்கம், ஒத்துழைப்பு. மற்றும் கணினித் துறையின் எதிர்காலம் ஆகியவற்றைப் போற்றிக் கொண்டாடும் ஒன்றுகூடலாக ICAC 2025 நிகழ்வு மாபெரும் வெற்றிகரமான ஒரு நிகழ்வாக இடம்பெற்றது. வலுவான தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம், உலகளாவில் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள பிரதான உரைகளை நிகழ்த்திய பேச்சாளர்கள், மற்றும் சிறந்த பலனை வழங்கும் மாநாட்டுக்கு முன்னரான மற்றும் பின்னரான செலமர்வுகள் என, செயற்கை நுண்ணறிவு, துளிய தொழில்நுட்பம், மற்றும் பரிணமித்து வரும் கணினித் துறை நிலைப்பாட்டு மாற்றங்கள் மத்தியில் அறிவின் வரையறைகளை இந்த ஆண்டின் மாநாடு உண்மையில் மேலும் விரிவடையச் செய்துள்ளது என்றால் மிகையாகாது”. 

சிந்தனைகளின் துடிப்பான பரிமாற்றம், வலுவான தொழில்துறை கூட்டாண்மைகள் மற்றும் ஆராய்ச்சியின் மகத்துவத்தை முன்னேற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், ICAC 2025 நிகழ்வானது கணினித்துறையின் எதிர்காலத்தில் செல்வாக்குச் செலுத்தவல்ல உலகளாவிய ஆராய்ச்சி இணைப்புகளை மேலும் வலுப்படுத்தி, புத்தாக்கத்திற்கான புதிய வழிமுறைகளுக்கு உத்வேகமளித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05