Dec 24, 2025 - 12:49 PM -
0
சிவனொளிபாதமலை - ஹட்டன் வீதியில் மண்சரிவுக்கு உள்ளான மகாகிரிதம்ப பிரதேசத்தின் படிக்கட்டுகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளை இராணுவத்தினர் தற்போது துரிதமாக புனரமைத்து வருகின்றனர்.
சிவனொளிபாதமலை பாதையின் மகாகிரிதம்ப பகுதியில் யாத்திரிகர்களால் சூழலில் வீசப்பட்ட கழிவுகளின் மீது வளர்ந்த ஆக்கிரமிப்பு தாவரங்கள், மழையுடன் சேர்ந்து கழிவுகளோடு கீழே சரிந்து பாதுகாப்பு வேலியின் மீது விழுந்ததால் வேலிக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஸ்தல ஆய்வு மேற்கொண்டு வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய, இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட இடத்தில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், பணிகள் நிறைவடைந்த பின்னர் யாத்திரிகர்கள் எவ்வித சிரமமுமின்றி சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொள்ள முடியும் எனவும் சிவனொளிபாதமலை விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

