வணிகம்
SLT‑MOBITEL, CMA சிறப்பு ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றது

Dec 24, 2025 - 03:09 PM -

0

SLT‑MOBITEL, CMA சிறப்பு ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றது

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT‑MOBITEL, கூட்டாண்மை பொறுப்புக்கூரல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் தனது தலைமை நிலையை உறுதி செய்து, இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவகத்தினால் (CMA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட CMA சிறப்பு ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் விருதுகள் 2025 இல் உயர் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வு அண்மையில் கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சிறந்த கூட்டாண்மை அறிக்கையிடல் – தொலைத்தொடர்பாடல் துறை (அரச) பிரிவில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், நிலைபேறான பெறுமதி உருவாக்கம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த அறிக்கையிடல் நியமங்கள் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தமைக்காக சான்றிதழையும் பெற்றுக் கொண்டது. 

இந்த சாதனைகளினூடாக, பாரம்பரிய அறிக்கையிடல் முறைகளிலிருந்து, பரந்த, பங்காளர்களில் கவனம் செலுத்தும் நிலைபேறாண்மை, ஆளுகை மற்றும் சமூக தாக்கம் போன்ற அம்சங்களை ஒன்றிணைக்கப்பட்ட நிதிசார் பெறுபேறுகளை உள்ளடக்கி விரிவாக்கம் செய்யும் SLT‑MOBITEL இன் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சிறந்த செயற்பாடுகளுடன் வருடாந்த அறிக்கையிடலை ஒன்றிணைத்து செயலாற்றும் SLT‑MOBITEL, தனது நம்பிக்கைத் தன்மையை உறுதி செய்துள்ளதுடன், முதலீட்டாளர் நம்பிக்கை கட்டியெழுப்பி, இணைந்த சிந்தனையினூடாக எவ்வாறு நீண்ட கால பெறுமதி உருவாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கட்டியெழுப்பியுள்ளது. 

இந்த விருது, SLT-MOBITEL அதன் செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் ESG கோட்பாடுகளையும் நிலைபேறாண்மையையும் உட்படுத்தி, நம்பிக்கையை கட்டியெழுப்புவதிலும், புதுமையைப் புகுத்துவதிலும் வெற்றி பெற்றிருப்பதையும், மேலும் இலங்கைக்கு மிகவும் வெளிப்படையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் உள்ள அதன் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது. சமூகங்களுக்கு அதிகாரமளிக்கவும், அதன் வணிகத்தை பலப்படுத்தவும், நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு பங்களிக்கவும் புதுமை மற்றும் ஒருங்கிணைந்த சிந்தனையைப் பயன்படுத்த நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. 

தற்போது தொடர்ச்சியாக 11வது ஆண்டாக நடைபெறும் CMA ஒருங்கிணந்த அறிக்கை சமர்ப்பிப்புக்கான சிறப்பு விருதுகள், இலங்கையில் நிறுவனங்களின் அறிக்கை சமர்ப்பிப்புத் தரத்திற்கான ஒரு அளவுகோலாக உள்ளது. இந்த விருதுகள், ஒருங்கிணந்த அறிக்கை சமர்ப்பிப்பில் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன. இது நிறுவனங்கள் தங்கள் மூலோபாயம், நிர்வாகம் மற்றும் செயல்திறன் பற்றிய தெளிவான, முழுமையான பார்வையைப் பரிமாறிக் கொள்வதை உறுதி செய்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05