Dec 24, 2025 - 04:46 PM -
0
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை (24) நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று (24) ஹட்டன் பிரதான நகரில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் வழமைபோல் காணப்பட்டதுடன் கிறிஸ்தவ மக்கள் சிலர் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ததையும் காணமுடிந்தது.
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெற உள்ளது.
நத்தார் ஆராதனையை முன்னிட்டு ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் உள்ள தேவாலயத்தில் விசேட பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--

