Dec 25, 2025 - 09:37 AM -
0
சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர், கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சுற்றாடல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்காலத்தில் நாடு முழுவதும் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

