Dec 26, 2025 - 11:04 AM -
0
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நேற்று (25) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய அவரைப் பிரதேசவாசிகள் மீட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
49 வயதான குறித்த வைத்தியர், குறித்த வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்று சுமார் ஒரு மாதமே ஆகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

