Dec 26, 2025 - 11:26 AM -
0
சுனாமி அலைகளால் பெரேலிய பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின், இம்முறை பெரேலிய விபத்தை நினைவுகூரும் வகையில் அடையாளபூர்வமாகப் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், வேறு ஒரு என்ஜினைப் பயன்படுத்தி, 'சுனாமி ரயில்' என அழைக்கப்படும் விபத்துக்குள்ளான ரயிலை இன்று (26) மாத்தறை வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
விபத்துக்குள்ளான குறித்த என்ஜின் கடந்த பல வருடங்களாகத் தொடர்ச்சியாக இயக்கப்பட்ட போதிலும், இம்முறை அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது இயக்கப்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த என்ஜினின் அச்சாணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, இன்று காலை அதனை இயக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

