Dec 26, 2025 - 12:07 PM -
0
இலங்கையில் சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்று (26) உடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தர் நிலை முன்னால் இன்று திகதி விளக்கேற்றி ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வரும் வாகனங்கள் 9.25 தொடக்கம் 9.27 வரை நிறுத்தப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஹட்டன் பொலிஸார் ஹட்டன் நகரசபையின் செயலாளர் உட்பட உத்தியோகஸ்தர்கள் உட்பட பொது மக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தப்பட்டன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.
இதனால் எமது நாட்டில் 35,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர்.
--

