Dec 26, 2025 - 02:04 PM -
0
ராகம, பஹலவத்தை பகுதியில் கார் ஒன்றிலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மெகஸின்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் குறித்த கார் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
தற்போது மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் குறித்த சந்தேகநபர், அந்தக் காரின் சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறையிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த 'திக்பிடிகொட கல்ப' என்பவரைக் கொலை செய்வதற்காகவே இந்தத் துப்பாக்கி கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
'திக்பிடிகொட லஹிரு' என்பவரின் திட்டமிடலுக்கு அமையவே இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்த நபர் அதிகளவான 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தியதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று நடந்துகொண்டதாகவும், இதன் காரணமாகவே கொலையைச் செய்யாமல் காரையும் துப்பாக்கியையும் அந்த இடத்தில் கைவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

