Dec 27, 2025 - 11:29 AM -
0
ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று (26) நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் அவரது மகனும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
நேற்று மதிய வேளையில் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த உயிர் காப்பு அதிகாரிகளான உப பொலிஸ் பரிசோதகர் சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் (87162) திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (96221) துமிந்த ஆகிய அதிகாரிகளே இவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
42 வயதுடைய உக்ரைன் நாட்டுப் பெண் மற்றும் அவரது 14 வயதுடைய மகனே இந்த அனர்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

