Dec 27, 2025 - 01:02 PM -
0
அவுஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஏஷஸ் தொடரில் 4-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது.
போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் 42 ஓட்டங்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களை எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
பின்னர் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமான நிலையில் இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. மதிய உணவு இடைவேளைக்குள் 88 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டை பறி கொடுத்தது.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி இங்கிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 32.2 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 04 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, அவுஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி இங்கிலாந்து பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
5468 நாட்கள், அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.
ஏஷஸ் தொடரின் முதல் மற்றும் 4-வது போட்டிகள் 2 நாட்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஏஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4ஆம் திகதி சிட்னியில் தொடங்குகிறது.

