Dec 29, 2025 - 05:03 PM -
0
கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தவிசாளரினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று (28) இரவு 11 மணியளவில் தமது வர்த்தக நிலையத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை மறித்து நிறுத்தப்பட்டதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
அங்கு கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மற்றொருவர் இருந்ததாகவும், அவர்கள் மதுபோதையில் தம்மைத் திட்டியதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் 'அத தெரண'விடம் தெரிவித்தார்.

