Dec 29, 2025 - 05:13 PM -
0
பங்களாதேஷில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் பங்களாதேஷில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக சுமார் 71 மத நிந்தனை குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், பிரோஜ்பூர் மாவட்டத்தின் தும்ரிதாலா கிராமத்தில் இந்து குடும்பங்களுக்குச் சொந்தமான 05 வீடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

