Dec 29, 2025 - 06:36 PM -
0
தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் 9. விஜய் சேதுபதி 2 ஆவது முறையாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது என்று கூட சொல்லலாம்.
இதில் போட்டியிட்ட சில போட்டியாளர்கள் ஆரம்பத்தில் நன்றாக விளையாடினார்கள், போக போக சரியான ஆட்டம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்து.
கடந்த அக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து கனி வெளியேறி இருந்தார், மேலும் அமித் பார்கவும் வெளியேறினார்.
ரசிகர்களே கனியின் எலிமினேஷனை எதிர்ப்பார்க்காத நிலையில் அவருமே தனது எவிக்ஷன் குறித்து செம ஷாக்கில் தான் இருந்துள்ளார். இதுகுறித்து அவர் எமோஷ்னல் ஆனபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கு இத்தனை நாள் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு என்னை ஏன் மக்களுக்கு பிடிக்காமல் போனது, நான் எவிக்ஷன் ஆவேன் என எதிர்ப்பார்க்கவில்லை என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

