Dec 30, 2025 - 06:32 AM -
0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இல்லங்களில் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டுகளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மறுத்துள்ளார்.
அத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க ரஷ்யா முற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள புட்டினின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது, உக்ரைன் இரவோடிரவாக 91 நீண்ட தூர ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டினார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை தற்போது மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் புட்டின் எங்கிருந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
குறித்த குற்றச்சாட்டு போலியானது என நிராகரித்த ஷெலென்ஸ்கி, உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தொடர கிரெம்ளினுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதே இதன் நோக்கம் என்றார்.
ரஷ்யா முன்னதாக கியேவில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களைக் குறிவைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஷெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் மேலும் கூறுகையில்:
உலகம் இப்போது மௌனமாக இருக்கக் கூடாது என்பதை முக்கியமானதாக கருதுகிறார்கள். நிலையான அமைதியை அடைவதற்கான பணிகளை ரஷ்யா சீர்குலைக்க நாங்கள் அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

