Dec 30, 2025 - 06:48 PM -
0
NDB வங்கியானது தனது கந்தான கிளையில், வங்கியின் சிறப்புரிமை [Privilege] மற்றும் மேன்மைமிக்க [Elevate] வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக கல்வி கண்காட்சியை (Education Expo) வெற்றிகரமாக நிறைவு செய்தது. NDB வங்கியினால் இந்த நிகழ்வானது, உயர்ந்த நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளுக்கு அப்பால், மதிப்பு சேர்க்கும் அனுபவங்களை வழங்கும் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது; குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் வெளிநாட்டு கல்வி துறையில் இதன் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாகும்.
உலகளாவிய கல்வி வாய்ப்பானது, இலங்கை குடும்பங்களிடையே அதிகம் நாடப்படும் ஒரு வாய்ப்பாக மாறி வரும் இவ்வேளையில், இந்த கண்காட்சி சரியான நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மேடையாக செயல்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சர்வதேச கல்வி வாய்ப்புகள் குறித்த நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற முடிந்தது. முழுமையான மற்றும் இடையறாத அனுபவத்தை வழங்கும் நோக்கில், உலகளாவிய வலுவான தொடர்பு வலையமைப்பும், மாணவர்களை உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு வழிநடத்தும் நிபுணத்துவமும் கொண்ட, இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க கல்வி ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான International Scholar நிறுவனத்துடன் NDB வங்கி கூட்டிணைந்தது.
இந்த நிகழ்வில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், கனடா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 60க்கும் அதிகமான NDB வாடிக்கையாளர்கள் இந்த கல்விக் கண்காட்சியில் பங்கேற்று, அனுமதிக்கான நடைமுறைகள், கல்வி பாடநெறிகள், உதவித்தொகைகள், தொழில்முறை பாதைகள் மற்றும் குடியேற்ற ஆதரவு குறித்த தனிப்பயன் ஆலோசனைகளைப் பெற்றனர். இதன் மூலம்,தமது குழந்தைகளின் கல்வி எதிர்காலம் குறித்து அறிவார்ந்த முடிவுகளை எடுக்க அவர்கள் வலுப்பெற்றனர்.
இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த NDB சிறப்புரிமை வங்கிப்பிரிவின் [Privilege Banking] உதவி துணைத் தலைவர் (AVP) மற்றும் தலைவர் கிஹான் புஞ்சிஹேவா, இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது அர்த்தமுள்ள ஈடுபாட்டின் மூலம் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துவதோடு, பாரம்பரிய வங்கி சேவைகளுக்கப்பால் வாடிக்கையாளர்களின் கனவுகள் மற்றும் இலக்குகளை பூர்த்தி செய்யும் உயர்தர சேவை வழங்குநராக NDB வங்கியின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது எனக் கூறினார்.மேலும், வெளிநாட்டு கல்விக்கான நிதி ஆதரவை எளிமைப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட மாணவர் கோப்பு [Student File] திட்டத்தையும் இந்த கண்காட்சி முன்னிறுத்தியது. இது Privilege மற்றும் Elevate வாடிக்கையாளர்களுக்கு வசதி மற்றும் நம்பகமான ஆலோசனை சேவைகளை வழங்கும் NDB வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்தியது.
வெற்றிகரமான பங்கேற்பும், கிடைத்த நேர்மறையான பின்னூட்டமும், வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதிலும், புதிய கூட்டாண்மை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக்காட்டின. இதன் மூலம், முன்னணி கல்வி நிறுவனங்களுடன் எதிர்கால கூட்டுறவுகளுக்கான பாதைகளும் திறக்கப்பட்டு, உயர்ந்த நிகர மதிப்புடைய மற்றும் வளர்ந்து வரும் செல்வாக்கு கொண்ட பிரிவுகளில் புதிய வாடிக்கையாளர்களுடன் NDB வங்கிக்கு தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகளும் விரிவடைந்தன.
கந்தான கல்விக் கண்காட்சி போன்ற முயற்சிகள் மூலம், குடும்பங்களை வலுப்படுத்துவதிலும், சமூக உறவுகளை உறுதிப்படுத்துவதிலும், அடுத்த தலைமுறையினர் தமது உலகளாவிய கனவுகளை நிறைவேற்ற ஆதரவு வழங்குவதிலும் NDB வங்கி தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்து வருகிறது.

