Dec 30, 2025 - 08:46 PM -
0
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் கடந்த 24 ஆம் திகதி இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தின் ஊடாக, இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் 20% வரி வீதத்தை, 2026 ஆம் ஆண்டுக்கு மாத்திரம் பொருந்தும் வகையில் தற்காலிகமாக 12% ஆகக் குறைப்பது குறித்து கனிவான அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த காலங்களின் போது அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக முன்னாள் அமைச்சர் அழகப்பெரும தனது நன்றியினை இக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

