Dec 30, 2025 - 09:31 PM -
0
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு 25,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற குடும்பங்களில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு முடிந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் திகதிக்குள் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் சிலவற்றை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.
இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற 450,225 குடும்பங்களில் 87.4% சதவீதமானோருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவுக்காகத் தகுதிபெற்றுள்ள 153,593 குடும்பங்களில் 8.63% சதவீதமானோருக்கு உரிய தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற 216,142 மாணவர்களில் 14.9% சதவீதமானோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

