செய்திகள்
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா

Dec 31, 2025 - 11:10 AM -

0

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா

இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

2030 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் அது 7.3 டிரில்லியன் டொலராக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகளின்படி, இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரதான பொருளாதார நாடாகவும் இந்தியா கணிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், 2023 ஆம் ஆண்டில் அண்டை நாடான சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாகவும் இந்தியா மாறியமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05