சினிமா
ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமணம் எப்பொழுது தெரியுமா?

Dec 31, 2025 - 12:15 PM -

0

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமணம் எப்பொழுது தெரியுமா?

நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதை அனைவரும் அறிவோம். ஆனால், அவர்கள் இருவரும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவ்வப்போது அவர்கள் இருவரும் வெளியிடும் புகைப்படங்கள் இவர்கள் காதலித்து வருவதை உறுதி செய்து வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. நிச்சயதார்த்த மோதிரத்தை ராஷ்மிகா தனது கையில் அணிந்துள்ளார் என கூறி சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் 2026 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கிட்டத்தட்ட உறுதியாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், இவர்களின் திருமண திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவர்களின் திருமணம் உதய்பூரில் உள்ள மாளிகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கப்போவதாக தெரியவந்துள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் தகவல் ஆகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05