Jan 1, 2026 - 12:49 PM -
0
இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகள் சமூகத்தின் நல்வாழ்வு, கண்ணியம், மற்றும் அன்றாட தேவைகளுக்கு உதவும் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், DFCC கருசரு சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான, நாடளாவிய சுகாதாரப் பராமரிப்பு நன்மைகளை வழங்குவதற்காக DFCC வங்கியானது Singhe Hospitals PLC உடன் கைகோர்த்துள்ளது.
இக்கூட்டாண்மையின் கீழ், விசேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ ஆலோசனை நியமனங்கள், வைத்தியர்களைச் சந்திப்பதற்கான நியமன சேவைகள், ஆய்வுகூட பரிசோதனைகள், நோய் கண்டறிவதற்கான கதிர்ப்பட சேவை, மற்றும் தெரிவு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை உள்ளிட்ட பரந்த வகைப்பட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான கட்டணங்களுடன் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு DFCC கருசரு டெபிட் அட்டை வாடிக்கையாளர்களுக்கு கிட்டியுள்ளது. மருத்துவ தேவைகள் அடிக்கடி மற்றும் முக்கியமாக எழுகின்ற வாழ்வின் பருவமொன்றில் தரமான சுகாதாரப் பராமரிப்பு சேவை தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதையும், சிக்கமான கட்டணங்களில் அவை கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் இம்முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வுகூட பரிசோதனைகள், எக்ஸ்-ரே சேவை, அல்ட்ராசவுண்ட் சேவை, எக்கோகாடியோகிராம் சேவை, CT ஸ்கேன் சேவை, மற்றும் நுரையீரல் செயல்பாடு தொடர்பான மதிப்பீடுகள், அத்துடன் என்டோஸ்கோபி மற்றும் கொலோனோஸ்கோபி உள்ளிட்ட சிகிச்சை நடைமுறைகளுக்கு சலுகை கட்டணங்கள் போன்ற பல்வேறுபட்ட நோய் கண்டறியும் சிகிச்சைகளுக்கு இதன் மூலம் வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றன. VIP, Luxury, மற்றும் Supreme வகை உள்ளிட்ட வைத்தியசாலை தங்கும் அறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான கட்டணங்களை கருசரு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், உள்நோயாளர் மற்றும் ஒரே நாளில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளுக்கு குறைந்த கட்டணங்களுடனான சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தள்ளுபடி கட்டணத்துடன் அம்பியுலன்ஸ் உதவி மற்றும் வைத்தியர்கள் வீட்டுக்கு நேரடியாக வருகை தரும் போக்குவரத்து உதவி போன்ற கூடுதல் சேவைகளும் கிடைக்கப்பெறுவதுடன், போக்குவரத்து உதவிகள் தேவைப்படும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இது கூடுதல் சௌகரியத்தை வழங்குகின்றது.
DFCC வங்கியின் சிரேஷ்ட வாடிக்கையாளர்களுக்கு புவியியல் ரீதியாக இச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதை உறுதி செய்யும் வகையில், இரத்தினபுரி, கஹவத்தை, கலவானை, எம்பிலிப்பிட்டி, பலாங்கொடை, பண்டாரவளை, ஹோமாகம, அவிசாவளை, கண்டி, நீர்கொழும்பு மற்றும் கராப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள Singhe Hospitals ன் விசாலமான வலையமைப்பினூடாக இவ்வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெறுகின்றன. பாரம்பரியமான வங்கிச்சேவை நன்மைகளுக்கு அப்பாற்சென்று, சுகாதாரப் பராமரிப்பு சேவையைப் பெற்றுக்கொள்ளல், செலவுகளை நிர்வகித்தல், மற்றும் மன நிம்மதி போன்ற நிஜ வாழ்வின் முன்னுரிமைகளுக்கு தீர்வு அளிப்பதில் ஒரு முழுமையான திட்டமாக கருசரு சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்கினை இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்துகின்றது. நிதியியல் பாதுகாப்பை நம்பகமான மருத்துவ உதவியுடன் ஒருங்கிணைப்பதன் மூலமாக, வாடிக்கையாளர்கள் எவ்வாறு உண்மையான வாழ்வை முன்னெடுக்கின்றனர் என்பதற்கு சரியான பதில் நடவடிக்கைகளை வழங்கும் தீர்வுகளை DFCC வங்கி தொடர்ந்தும் உருவாக்கி வருகின்றது.
DFCC வங்கியின் தனிநபர் மற்றும் வணிக வங்கிச்சேவைப் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது சிரேஷ்ட வாடிக்கையாளர்களுக்கு உதவுவது என்பது அவர்களுக்கு சௌகரியமான வங்கிச்சேவையை வழங்குவதற்கும் அப்பாற்பட்டது. Singhe Hospitals உடனான இக்கூட்டாண்மை மூலமாக அத்தியாவசிய சுகாதாரப் பராமரிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான செலவு மற்றும் சிக்கல்களை நாம் இலகுபடுத்த உதவுவதுடன், அவர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தின் மையமாக அவர்களுடைய கண்ணியமும், பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் இருப்பதை உறுதி செய்கின்றோம். சிந்தனைக்கும், நடைமுறை மதிப்புக்கும் மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற வாழ்வின் ஒரு காலகட்டத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் கருசரு உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ள சுகாதாரப் பராமரிப்பு வரப்பிரசாதங்களுடன், DFCC கருசரு சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்கு, இலங்கை எங்கிலும் சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்க்கை முறையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், நிதியியல் ஸ்திரத்தன்மை, அன்றாட நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு மூலமாக உதவி, வங்கி வழங்குகின்ற மிகவும் அர்த்தம் நிறைந்த தீர்வுகளில் ஒன்றாகப் பரிணமித்து வருகின்றது.

