Jan 1, 2026 - 04:10 PM -
0
இலங்கையில் நவநாகரிக ஆடை அணிகலன் விற்பனை துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் மதிப்பும் பெற்றுள்ள Sriyani Dress Point நிறுவனம், ‘இலங்கையை மீள்கட்டியெழுப்பும்’ அரச நிதிக்கு ரூபாய் 20 மில்லியன் மதிப்பிலான பாரியளவிலான நிதி நன்கொடையை வழங்கியது. மேலும் டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கும் நோக்கில், விரிவான நிவாரண நடவடிக்கைகளை அந்த நிறுவனம் வெற்றிகரமாக ஆரம்பித்தது. மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான இத்தகைய தருணத்தில் தன்னார்வமாக உதவிக்கரம் நீட்டியமை சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் Sriyani Dress Point நிறுவனம் எடுத்த தனித்துவமான முன்னோடி நடவடிக்கை ஒன்றாக கருதப்படுகின்றது.
இந்த பாரிய நிதி நன்கொடை, சமீபத்தில் ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் நந்திக சனத் குமநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. Sriyani Dress Point நிறுவனத்தின் தலைவர் எம். செல்வராஜ் அவர்கள், நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் உயர் தர அதிகாரிகளின் பங்கேற்புடன், இந்த நிதி நன்கொடையை அதிகாரபூர்வமாக வழங்கினார். இலங்கையை மீள்கட்டியெழுப்பும் பணிக்காக நிதி நன்கொடையினை வழங்கிய Sriyani Dress Point நிறுவனம், அதற்கு அப்பால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில், இலங்கை முழுவதும் அமைந்துள்ள தனது 8 காட்சியகங்களில் பணியாற்றும் ஊழியர்களை உடனடியாக ஒருங்கிணைத்து, அவசர உதவி தேவைப்படும் பகுதிகளுக்கு அந்த நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
இந்த அவசரத் தேவையின் பொழுது, Sriyani Dress Point இன் விரிவான விற்பனை நிலையங்கள் மிகவும் பயனுள்ள முறையில் உதவிகளை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்டன, இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விரைவாக வழங்கப்பட்டன. மேலும் நிவாரண நடவடிக்கைகள் விரைவாகவும் திறம்படவும் மக்களிடம் சென்றடையச் செய்வதற்காக, ஊடக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்பாராத விதமாக உருவான இந்த பேரிடர் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரைவாக உதவிக்கரம் நீட்டியிருப்பது, Sriyani Dress Point நிறுவனத்தின் ஆழமாக வேரூன்றிய மனிதாபிமான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகின்றது.
1993ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, இயற்கை பேரிடர்கள் ஏற்படும் தருணங்களில் சமூக நலனுக்காக தொடர்ந்து பங்களித்து வரும் Sriyani Dress Point, இவ்வாறான அவசர சூழ்நிலைகளில் மக்களுடன் தோளோடு தோள் நின்று செயல்படுவதை தனது அடிப்படை கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஒற்றை ஆடை விற்பனை நிலையமாக ஆரம்பித்து, பின்னர் 2,000 இற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, நாடு முழுவதும் கிளைகள் கொண்ட விற்பனை நிலைய வலையமைப்பாக விரிவடைந்த இந்த நிறுவனத்தின் வணிக அணுகுமுறையுடன் இடையறாது இணைந்திருக்கும் முக்கிய அம்சம், சமூக நலனுக்காக உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகும்.
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை, சமூக நலனில் உறுதியுடன் செயல்பட்டு, நாடெங்கும் இருக்கின்ற பாடசாலைகள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் மற்றும் மத தளங்களுக்கு Sriyani Dress Point நிறுவனம் வழங்கிய ஆதரவு, அதன் பெருமைக்குரிய வரலாற்றில் நிலையான பதிவாக இருக்கின்றது. சமீபத்தில் உருவான தேசிய அளவிலான பேரிடரின் பொழுது, நிதி பங்களிப்புகளுடன் மாத்திரமன்றி, உள்ளூர் சமூகங்களை நேரடியாக அணுகி, அவசர நிவாரண உதவிகளை வழங்கி, இவ்வாறு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கியமை, பிற நிறுவனங்களுக்கும் வலுவான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
Sriyani Dress Point குறித்து
1993 ஆம் ஆண்டு தொழிலதிபர் திரு. மாரியபிள்ளை செல்வராஜ் அவர்களால் நிறுவப்பட்ட Sriyani Dress Point, ஒரு ஆடை விற்பனை நிலையமாக ஆரம்பித்து, பின்னர் பிரதான நகரங்களில் அமைந்த 8 காட்சியகங்கள் மற்றும் 2,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட அமைப்பாக வளர்ச்சி பெற்று, நவநாகரிக ஆடை அணிகலன் விற்பனை துறையில் இலங்கையின் முன்னணி விற்பனை நிலைய வலையமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிறுவனம், இலங்கை முழுவதும் இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு, உயர்தர ஆடை அலங்காரப் பொருட்கள், அழகுப் பராமரிப்பு தயாரிப்புகள், உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தரமான தயாரிப்புகளை வழங்கி வருகின்றது.

