Jan 1, 2026 - 05:21 PM -
0
காரைதீவு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் 2026 ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
இதன்போது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொண்டதுடன் தவிசாளரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் அலுவலக நடவடிக்கைகள் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--

