செய்திகள்
மாவனெல்லையில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை

Jan 1, 2026 - 05:35 PM -

0

மாவனெல்லையில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை

மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05