Jan 1, 2026 - 10:33 PM -
0
கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதியவத்தை பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேகநபர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், பொலிஸ் சித்திரக் கலைஞரின் உதவியுடன் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளனர்.
எனவே, குறித்த சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
நிலையப் பொறுப்பதிகாரி / கொஹுவல பொலிஸ் நிலையம்: 071-8591669
நிலையப் பொறுப்பதிகாரி / குற்றப் புலனாய்வுப் பிரிவு: 071-4146727

