செய்திகள்
2025 இல் விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Jan 1, 2026 - 11:57 PM -

0

2025 இல் விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 322 ஆல் அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். 

அவர் வழங்கிய தகவல்களின்படி, 

2024 ஆம் ஆண்டில் 2,287 பாரிய வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2,388 மரணங்கள் பதிவாகியுள்ளன. 

2025 ஆம் ஆண்டில் பதிவான பாரிய வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 2,562 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. 

இதேவேளை, போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட 'E-Traffic' செயலியில் இந்த ஆண்டில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இதன்படி, யாராவது சட்டவிரோத முறையில் வாகனம் ஓட்டினால், அது குறித்து ஒரு பாதசாரி, பயணி அல்லது மற்றொரு வாகனச் சாரதி இந்தச் செயலியின் மூலம் உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்குத் தகவல் வழங்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05