Jan 2, 2026 - 10:20 AM -
0
விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வழக்கமாக விஜய் படம் என்றாலே ஆவலுடன் ரசிகர்கள் காத்திருப்பார்கள், அதுவும் இது அவருடைய கடைசி படம் வேற, சொல்லவா வேண்டும்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், இதுவரை நடந்த முன்பதிவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரையிலான முன்பதிவில் மட்டுமே 18.8 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது முன்பதிவில் இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (03) மாலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'ஜன நாயகன்' படத்தின் டிரைலர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

