Jan 3, 2026 - 06:53 AM -
0
டி-20 உலகக் கிண்ண தொடருக்கான மார்க்கிராம் தலைமையிலான தென்னாப்பிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணியில் இடம் பிடித்திருந்த 7 பேர் தற்போதும் இடம் பிடித்துள்ளனர்.
மார்க்கிராமை தவிர்த்து டி கொக், ரபாடா, யான்சன், நோர்ஜே, டேவிட் மில்லர், மகாராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆனால் டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டெவால்டு பிரேவிஸ், க்வெனா மபாகா, கார்பின் போஸ்ச், டோனி டி ஜோர்சி, ஜேசன் ஸ்மித், டொனோவன் பெரைரா, ஜோர்ஜ் லிண்டே ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க குழாமில், மார்க்கிராம், போஸ்ச், டெவால்டு பிரேவிஸ், டி கொக், டோனி டி ஜோர்சி, டொனோவன் பெரைரா, மார்கோ யான்சன், ஜோர்ஜ் லிண்டே, மகாராஜ், க்வெனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

