செய்திகள்
காரைநகர் கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது

Jan 3, 2026 - 12:44 PM -

0

காரைநகர் கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (02) கைது செய்யப்பட்டுள்ளனர். 

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, காரைநகர் கடற்பரப்பில் வைத்து IND/PY/PK/MM/979 என்ற இலக்கத்தைக் கொண்ட ஒரு படகுடன் 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த பல ஆண்டுகளாகப் பறிமுதல் செய்யப்பட்ட 253 மீன்பிடிப் படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05