Jan 3, 2026 - 01:45 PM -
0
வெனிசுலா தலைநகர் கெரகஸில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் ஒரு தாக்குதல் எனவும், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் பிபிசி (BBC) செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை 1.50 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா இராணுவ முகாம்கள் சிலவே இத்தாக்குதல்களின் இலக்காக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக நகரின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தற்போது தடைப்பட்டுள்ளது.
வெடிப்புகளைத் தொடர்ந்து நகருக்கு மேலே விமானங்கள் பறப்பதை அவதானிக்க முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வெனிசுலா ஜனாதிபதியால் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

