Jan 3, 2026 - 03:16 PM -
0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கமைய வெனிசுலா மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தனது 'Truth Social' கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களே இத்தாக்குதல்களின் இலக்காக அமைந்திருந்தன.

