Jan 3, 2026 - 06:18 PM -
0
பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று (02) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் அந்த இடத்திலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் தப்பியோடிய நிலையில், பின்னர் அவர் வேயங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடமிருந்து சுமார் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

