உலகம்
சீன - தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே முக்கிய சந்திப்பு!

Jan 5, 2026 - 07:33 AM -

0

சீன - தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே முக்கிய சந்திப்பு!

தென் கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடனான விரிசல் அடைந்த உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இன்று (5) சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பிராந்திய பாதுகாப்பு மற்றும் கொரிய பொப் கலாச்சாரம் மீதான சீனாவின் அதிகாரப்பூர்வமற்ற தடை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

கடந்த நவம்பரில் சீ ஜின்பிங் தென் கொரியாவிற்கு விஜயம் செய்த பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். 

தென்கொரியாவுக்கு சீனா ஒரு முக்கியமான பொருளாதார பங்காளியாக இருப்பதால், பிராந்தியத்தில் அரசியல் பதற்றங்கள் ஏற்படும் போது, சீனா தனது பொருளாதார உறவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தாது என்பதற்கான உறுதியை லீ ஜே மியுங் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

கடந்த சில வாரங்களாக, சீனா மற்றும் ஜப்பான் இடையே தாய்வான் விவகாரத்தில் ராஜதந்திர மோதல் நிலவி வருகிறது. 

இது பிராந்தியத்தின் முக்கிய சக்தியான தென் கொரியாவை சங்கடமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. 

தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் தனது தற்காப்புப் படையின் மூலம் பதிலடி கொடுக்கும் என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு எதிரான தனது கண்டனங்களை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. 

ஜப்பானைப் போலவே, தென் கொரியாவும் அமெரிக்காவின் நட்பு நாடாகும். 

அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவளிப்பதோடு, அதன் பாதுகாப்பிற்காக ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. 

இத்தகைய சூழலில் லீயின் இந்த சீனப் பயணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05