Jan 5, 2026 - 09:08 AM -
0
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நபரை தேடும் பணிகள் இன்றும் (5) முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அந்த நபர் காணாமல் போயுள்ள நிலையில், அவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து பிரதேச மக்கள் ஆழ்கடல் சுழியோடிகள் பொலிஸார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலை இழுத்துச் சென்றதாக கூறப்படும் நபர் ஒலுவில் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
--

