Jan 5, 2026 - 09:24 AM -
0
மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 1080 லீட்டர் கோடா, 109 போத்தல்களில் இருந்த 81 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர் அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

