Jan 5, 2026 - 11:03 AM -
0
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சோதனை நடவடிக்கைகளின் போது 28,333 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 263 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 141 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பாக 424 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

