Jan 5, 2026 - 01:44 PM -
0
நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப்பில் பயணிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலியான நிலையில், 14 பேரை காணவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிகாவா மாநிலத்தில் உள்ள அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு, யோப் மாநிலத்தில் உள்ள கார்பிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் 52 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் குறைந்தது 25 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது வரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயமான 14 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது யோப் மாநில அவசரநிலை மேலாண்மை ஏஜென்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
லீக்கேஜ் காரணமாக படகு நீரில் மூழ்கியதாக ஜிகாவா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 03 ஆம் திகதி பொருட்களை வாங்கிய பின்னர், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

