Jan 5, 2026 - 02:05 PM -
0
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் செயற்கை கோமா நிலையிலிருந்து மீண்டு எழுந்தார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,
வைத்தியர்கள் அவரைத் செயற்கை கோமா நிலைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (04) செயற்கை கோமாவில் இருந்து டேமியன் எழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த இந்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த சவாலான காலகட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக வைத்தியசாலை மருத்துவக் குழுவினருக்கு எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இது ஒரு கடினமான நேரமாக இருந்துள்ளது, எனவே குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என டேமியன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 'அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறுபிரிவிற்கு மாற்றப்படுகிறார். இது அவர் எவ்வளவு சிறப்பாக மீண்டு வருகிறார் என்பதையும், நிலைமை விரைவாக மாறியுள்ளது என்பதையும் காட்டுகிறது' என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

