சினிமா
துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்!

Jan 5, 2026 - 02:27 PM -

0

துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்!

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். 

இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. 

பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டாலும், அந்த திகதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. 

இந்நிலையில் துருவ நட்சத்திரம் பட வெளியீட்டிற்கான பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05