Jan 5, 2026 - 02:38 PM -
0
தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக பயணித்து உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய், ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். வருகிற 9 ஆம் திகதி வெளிவரும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். 200 கோடி ரூபாவை தாண்டி இவருடைய சம்பளம் உள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக விஜய் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, தனது கடைசி படத்தில் நடிப்பதற்காக 230 கோடி ரூபா சம்பளம் வாங்கியுள்ளாராம்.
ஆனால், அதன்பின் டிஜிட்டல் மார்க்கெட் சற்று சரிவை சந்தித்த நிலையில், 10 கோடி ரூபா தயாரிப்பாளரிடம் திரும்ப தந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஜனநாயகன் படத்திற்காக நடிகர் விஜய் 220 கோடி ரூபா சம்பளமாக பெற்றுகிறார்.

