Jan 5, 2026 - 04:36 PM -
0
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 5 ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 160 ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 84 ஓட்டங்கள் அடித்த போதிலும், மற்ற வீரர்கள் சொதப்பினர்.
அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் 11 பந்துகளை சந்தித்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸை ஸ்டார்க் 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
மேலும், பென் ஸ்டோக்ஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய வீரர் அஸ்வின் 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தற்போது ஸ்டார்க் 14 முறை ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்து அஸ்வின் சாதனையை முறியடித்துள்ளார்.
நாதன் லயன் 10 முறையும், ஜடேஜா 8 முறையும் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.

