செய்திகள்
கல்வி சீர்திருத்த முன்னெடுப்புகள் இன்று ஆபாசமாக்கப்பட்டுள்ளது!

Jan 5, 2026 - 05:35 PM -

0

கல்வி சீர்திருத்த முன்னெடுப்புகள் இன்று ஆபாசமாக்கப்பட்டுள்ளது!

பல நாடுகள், இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அந்த அந்த நாடுகள் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், The Children's Online Privacy Protection Act (COPPA) என்ற வழிமுறை ஊடாக பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழிமுறையை பெற்றுக் கொடுத்து வருகின்றது. ஐக்கிய இராச்சியத்தை எடுத்துக் கொண்டால், Children’s Code காணப்படுகின்றன. இதன் ஊடாக பாதுகாப்பை வழங்குகின்றன. 

ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்து நோக்கினால், GDPR (EU-General Data Protection Regulation) வழிமுறை ஊடாக இந்த பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கின்றன. இந்தப் புதிய கல்வி சீர்திருத்தத் திட்டத்தில் இவை உள்ளடங்கி காணப்பட வேண்டும். மிக அவசரமாக, முறையான வழிமுறைகளை கையாளாமல், பூரண கலந்துரையாடலை முன்னெடுக்காமல், குறைந்த பட்சம் white paper, Green paper களையேனும் முன்வைக்காமல், இந்த திட்டத்தை முறைசாரா முறையில் முன்னெடுக்கச் சென்று தான், இந்த கல்வி சீர்திருத்த முன்னெடுப்புகள் இன்று ஆபாசமாக்கப்பட்டுள்ளது. ஆபாசமாக்கல் பாரதூரமான விடயமாகும். இதற்கு பொறுப்புக் கூற வேண்டியது ஒரு தரப்பு மாத்திரமல்ல என்று கருதுகிறேன். அதிகாரிகளும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். 

அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூற வேண்டும். கொள்கை வகுப்பாளர்களும் பொறுப்புக் கூற வேண்டும். நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சரும் கட்டாயம் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். நமது நாட்டின் பிள்ளைகளின் உரிமைகளை மீறும் செயலே இதன் மூலம் நடந்துள்ளது. இதற்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

மீரிகம பிரதேசத்தில் இன்று (05) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். இந்த ஆபாசமயமாக்கு காரணமானவர்களை தேட வேண்டும். மூடி மறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பயனில்லை. ஆகையால், இதற்காக வெளித்தெரியும் விதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும். இது எவ்வாறு நடந்தது? இதற்கு யார் பொறுப்புக் கூற வேண்டும்? இதனை யார் பொறுப்பெடுப்பது என்பது தொடர்பில் ஆரய வேண்டும். இதில் ஒவ்வொருத்தருக்கும் தப்பிச் செல்ல முடியாது. தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் இதன் விசாரணைகள் முடியும் வரையில் தற்காலிகமாகப் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் இதனால் தீர்வு கிடைக்காது. இதற்கான முடிவுகளை சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலமே எடுக்க வேண்டும். இதன் மூலமே இதனைத் தெரிவிக்க முடியும். தவறு நடந்த இடத்தை சரியாக கண்டுகொள்ள வேண்டும். 

கல்விச் சீர்திருத்தத்தில் இந்த ஆபாசமாக்கல் தறனான ஒரு விடயமாகும், அதுபோலவே வரலாறு பாடத்தை கட்டாய பாடமாக்காமல் இருக்கும் விடயமும் மற்றுமொரு தவறான விடயமாகும். ஆகவே நாம் இந்த தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். நாம் கூறுவதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கல்விச் சீர்த்திருத்தம் நடந்தே ஆக வேண்டும். இது கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டும். புத்தாக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல தொழிநுட்பகளைப் பயன்படுத்தி உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. இதற்கு ஏற்றாற் போல் எமது கல்வித்திட்டம் மாற வேண்டும். இதன் நிமித்தமே நாம் பாடசாலைகளுக்கு பிரபஞ்சம் வேலைத்திட்டம் ஊடாக Smart Class Room வசதிகளை வழங்கி வந்தோம். இதனை நாம் முன்னெடுத்து வந்த போது, இந்த உபகரணங்களை வழங்கி வந்த போது, நாம் ஆபாசமாக்கலை முன்னெடுக்கவில்லை. 

இதற்கு அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும். தவறு நடந்த இடம் விசாரிக்கப்பட வேண்டும். பிள்ளைகளின் மனதை திரிவுபடுத்தும் செயலை யார் செய்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு வழங்கும் தீர்ப்பு என்னவென்றும் நாம் தெரிய வேண்டும். 

இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பில் சமூகத்தில் எந்த கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை. விவாதிக்கப்படாமல், கலந்துரையாடப்படாமல் தன்னிச்சையாகவும் தலைக்கனமாகவும் மேற்கொள்ளப்படும் இந்த சீர்திருத்த திட்டங்களால் பிள்ளைகளே பாதிக்கப்படுகின்றனர். 

இந்த அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தனது கருத்து மாத்திரமே சரியானது என்ற நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றது. ஏனையோர்களின் கருத்துக்களையும், முற்போக்கான கருத்துக்களையும் இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். அதற்கு செவிசாய்க்க வேண்டும். கல்விச் சீர்திருத்தங்களை இந்தவாறு ஒருதலைபட்சமாக, தலைக்கன போக்கில் முன்னெடுக்க முடியாது. 

நமது நாட்டில் எத்தனை மாணவர்களுக்கு ஸ்மார்ட் சாதனங்களுக்கான அணுகல் காணப்படுகின்றன. அதன் இணைப்பு வசதிகள் எங்ஙனம் காணப்படுகின்றன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கல்வியில் புதுமைகளைச் சேர்பதைப் போலவே பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். நடந்த தவறு போன்ற விடயங்கள் நடக்கலாம். ஆகவே இது தொடர்பில் பாராபட்சமற்ற விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும். 

நமது நாட்டில் மிகவும் மதிப்புமிக்க வளம் மாணவ வளமாகுமாகும். அவதானத்துக்குரிய வளமும் இந்த மாணவ வளமாகும். எனவே, இந்நேரத்தில் இந்த விடயம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைகள் தேவை. இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05