செய்திகள்
ஜோன்ஸ்டனும் அவரது இளைய மகனும் விளக்கமறியலில்

Jan 5, 2026 - 06:15 PM -

0

ஜோன்ஸ்டனும் அவரது இளைய மகனும் விளக்கமறியலில்

நிதி மோசடி விசாரணை விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இன்று காலை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையான போதே, முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் அப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05