Jan 5, 2026 - 06:17 PM -
0
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு வழங்கும் சமூக பொறுப்பு நிதி 19.9 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் பிரதேச சபை வளாகத்தில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார்.
புலம்பெயர்ந்து வாழ்கின்றவர் இங்கு மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்து இங்கு இருக்கின்ற வளங்களை எவ்வாறு பயன்படுத்தி இலாபம் அடையலாம் என யோசித்து இங்கு வந்து தொழில் நிறுவனங்களை அமைக்கின்றனர்.
ஆனால் எமது புலம்பெயர்ந்த உறவுகள் கோடிக்கணக்கில் காணிகளை வாங்கி விட்டு அதில் மேல்மாடிகளை கட்டிவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவ்வாறான முதலீடுகள் செய்வதன் மூலம் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை வழங்கி எமது பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என தெரிவித்தார்.
--

