Jan 6, 2026 - 12:11 AM -
0
இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி நேற்று (05) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
3 போட்டிகளைக் கொண்ட இத்தொடர், எதிர்வரும் 7, 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் அணியினர் பாகிஸ்தானின் லாஹூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-154 இலக்க விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் இணைந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

