Jan 6, 2026 - 08:51 AM -
0
ஜப்பானின் ஷிமானே (Shimane)மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத் தீவிரத்தன்மை அளவுகோலின் படி (1 முதல் 7 வரை), இது 5 ஆம் நிலை கொண்ட ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:18 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 10 நிமிடங்களுக்குப் பின்னர், யசுகி (Yasugi) பிரதேசத்தில் நிலநடுக்கத் தீவிரத்தன்மை அளவுகோலில் 5 இற்கும் குறைந்த மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் தொடர்பில் ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எவ்வித சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கவில்லை.
எவ்வாறாயினும், பல பின்னதிர்வுகள் (aftershocks) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

