Jan 6, 2026 - 10:59 AM -
0
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வருகிற 9 ஆம் திகதி உலகெங்கும் வெளிவரவுள்ளது. இது அவருடைய கடைசி படம் என்பதால், எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை தமிழ் டிரைலர் மட்டுமே 39 மில்லியன் ஆர்கானிக் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் தரவில்லை. இதைப் பற்றிய சர்ச்சை நீடிக்கும் நிலையில், இன்று மாலைக்குள் சான்றிதழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இதுவரை நடந்த முன்பதிவில் ஜனநாயகன் படம் 36 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

