Jan 6, 2026 - 02:46 PM -
0
பொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளை சேகரிக்க நோர்வூட் பிரதேசசபை அதிக வரி அறவிடுதாக கோரி பொகவந்தலாவ வர்த்தகர்கள் இன்று (06) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவ வர்த்தக நிலையங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டமானது ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--

