வணிகம்
பேரூந்துகளில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு இடமளித்து, தேசிய போக்குவரத்தை டிஜிட்டல்மயமாக்குவதற்கு DFCC வங்கி ஆதரவளிக்கின்றது

Jan 6, 2026 - 07:05 PM -

0

பேரூந்துகளில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு இடமளித்து, தேசிய போக்குவரத்தை டிஜிட்டல்மயமாக்குவதற்கு DFCC வங்கி ஆதரவளிக்கின்றது

DFCC Point of Sale (POS) முனையங்கள் மூலமாக, பேரூந்துகளில் QR, கடன் மற்றும் டெபிட் அட்டைகளை ஏற்றுக்கொள்வதற்கு இடமளித்து, இலங்கையின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பிற்கு தனது டிஜிட்டல் கொடுப்பனவுகள் உட்கட்டமைப்பை DFCC வங்கி விரிவுபடுத்தியுள்ளது. பேரூந்து கட்டண வசூலிப்பை நவீனமயப்படுத்தி, பணப் பாவனையற்ற செயல்பாட்டு முறைமையை நோக்கி இத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போக்குவரத்து அமைச்சின் நாடளாவிய முயற்சிக்கு இது ஆதரவளிக்கின்றது. 

இதனை முன்னெடுப்பதன் ஒரு பகுதியாக, அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள செயல்பாட்டு வழிகாட்டல் விதிமுறைகளுக்கு அமைவாக, பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு POS முனையங்களை DFCC வங்கி வழங்கவுள்ளது. அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை தராதரங்களுக்கு இணங்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்த முனையங்கள் கொண்டிருப்பதுடன், சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் மத்தியில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துத்தி, பாதுகாப்பான மற்றும் நிகழ்நேர கட்டண வசூலிப்பிற்கு இடமளிக்கின்றது. அங்கீகாரம் பெற்ற டிக்கெட் விநியோக செயலி வழங்குனர்கள் மற்றும் வன்பொருள் வழங்குனர்கள் ஆகியோருடன் இணைந்து, இலத்திரனியல் டிக்கெட் விநியோக இயந்திரமொன்றையும் வங்கி வழங்குவதுடன், தினசரி பேரூந்து செயல்பாடுகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வை உருவாக்கியுள்ளது.   

DFCC வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும், தனிநபர் மற்றும் வணிக வங்கிச்சேவைக்கான தலைமை அதிகாரியுமான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் பேரூந்து வலையமைப்பை முற்றிலும் புதியதொரு டிஜிட்டல் வசதி கொண்ட முறைமைக்குள் இட்டுச் செல்வதற்கு போக்குவரத்து அமைச்சிற்கு ஆதரவளிப்பதில் DFCC வங்கி பெருமை கொள்கின்றது. பேரூந்துகளில் அட்டை மூலமான கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கு இடமளிப்பதனூடாக, பிரயாணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் தங்குதடையற்ற கொடுப்பனவு அனுபவத்தைத் தோற்றுவிக்க நாம் உதவுகின்ற அதேசமயம், செயல்பாட்டாளர்கள் தம்முடைய நாளாந்த கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை பாதுகாப்பான மற்றும் திறன்மிக்கதாக நிர்வகிக்கும் வழிமுறையை அவர்களுக்கு வழங்குகின்றது.” 

அத்தியாவசிய சேவை சார்ந்த துறைகள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை முன்னேற்றுவதில் DFCC வங்கியின் விரிவான மூலோபாயத்தின் அங்கமாக இந்த ஒத்துழைப்பு மாறியுள்ளது. பல்வேறுபட்ட துறைகள் மத்தியில் விரிவான அளவில் POS அமுல்படுத்தல்களை மேற்கொண்டு, அரசாங்கத்தின் நீண்ட கால டிஜிட்டல் பொருளாதார திட்டத்திற்கு ஆதரவாக தனது கொடுப்பனவு ஆற்றலை தற்போது பொதுப் போக்குவரத்து துறைக்கும் வங்கி விரிவுபடுத்தியுள்ளது. 

பேரூந்துகளில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளமை, பணப்பாவனை அற்ற போக்குவரத்து வழிமுறையை நோக்கிய தேசிய மாற்றத்தை விரைவுபடுத்தும் எனவும், பிரயாணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான, மற்றும் மிகவும் வசதியான கட்டணக் கொடுப்பனவு அனுபவத்தை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்ற அதேசமயம், இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்பின் மத்தியில் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றையும் மேம்படுத்தும். 

DFCC வங்கி குறித்த விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. 

நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05