Jan 6, 2026 - 08:27 PM -
0
'கில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா படுகாயமடைந்துள்ளார்.
சென்னை பாலவாக்கத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட படப்பிடிப்பில், ரோப் கயிறு உதவியுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது, எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியில் மோதி அவர் விபத்துக்குள்ளானார்.
இதில் அவரது இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

